November 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான மேலதிக தடுப்பூசிகளின் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன!

கனடாவுக்கான மேலதிக COVID தடுப்பூசிகளின் விநியோகங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் தேவையை விட கையிருப்பு அதிகமாக உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் கனடா 95 மில்லியன் தடுப்பூசிகளை பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

புதன்கிழமை வரை 75 மில்லியன் தடுப்பூசிகள் மாத்திரமே கனடாவை வந்தடைந்துள்ளன.

ஆனால் கனடா ஏற்கனவே 18.7 மில்லியன் தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ள நிலையில் மேலதிக தடுப்பூசிகளின் விநியோகத்தை இடை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை வரை 80 சதவீதமான கனேடியர்கள் முழுமையான தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரிப்பது பொறுப்பான தலைமை அல்ல: Trudeau

Lankathas Pathmanathan

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

Lankathas Pathmanathan

Leave a Comment