தேசியம்
செய்திகள்

Montreal துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட மூவர் மரணம்

Montreal நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

Montreal துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

Côte-des-Neiges பகுதியில் திங்கட்கிழமை (22) நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு அதிகாரி உயிரிழந்ததாகவும், மற்றொருவர் படுகாயமடைந்ததாகவும் Montréal காவல்துறை (SPVM) தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1:45 மணிக்கு சற்று முன்னதாக, அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதை SPVM உறுதி செய்தது.

இந்த சம்பவத்தில் சந்தேக நபரும், காயமடைந்த பொதுமகனும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இரண்டாவது காவல்துறை அதிகாரி ஒரு பெண் என தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த அவசர எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு Montréal நகர முதல்வர் Soraya Martinez Ferrada தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் “மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக” Quebec மாகாண முதல்வர் Christine Fréchette கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து தான் “பேரதிர்ச்சி அடைந்ததாக” பிரதமர் Mark Carney கூறினார்.

Related posts

இந்த வாரம் 1.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

25 KG போதை பொருள் பறிமுதல் – இரண்டு கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan

Hockey கனடாவுக்கு நிதியுதவியை நிறுத்த பெரு நிறுவனங்கள் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment