September 14, 2026
தேசியம்
செய்திகள்

Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டது!

Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

Brampton நகரில் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு நினைவகம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (21) சேதப்படுத்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

இனந்தெரியாத நபர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்தச் செயலுக்கு Ontario மாகாண சபை உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி, Toronto நகரசபை உறுப்பினர் நீதான் சான் ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தமிழின அழிப்பு நினைவகம் சிதைக்கப்பட்டிருப்பது தனக்கு மிகுந்த அருவருப்பையும் மனவேதனையையும் அளிக்கிறது என ஒரு அறிக்கையில் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.

தமிழின அழிப்பு நினைவகத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இழிவான நாசவேலையை வன்மையாகக் கண்டிப்பதாக லோகன் கணபதி கூறினார்.

இந்தச் செயல் தமிழர்களை ஒடுக்குவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியையின் பிரதிபலிப்பாகும் என நீதன் சான் தெரிவித்தார்.

நினைவகம் மீண்டும் மீண்டும் சேதப்படுத்தப்படுவதை கனடிய தமிழர் தேசிய அவை ஒரு அறிக்கையில் கண்டித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து Peelபிராந்திய காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் NCCT தனது அறிக்கையில் தெரிவித்தது.

Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் 2025-ஆம் ஆண்டு May மாதம் 10-ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள்: NCCT

Related posts

Ottawaவில் OPP அதிகாரிகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல்

Lankathas Pathmanathan

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan

COVID-19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

Leave a Comment