September 15, 2026
தேசியம்
செய்திகள்

Air கனடா விமானப் பணியாளர்கள் ஒப்பந்த வாக்களிப்பு புதன்கிழமை ஆரம்பம்!

Air கனடா விமானப் பணியாளர்கள் புதன்கிழமை (27) முதல் தற்காலிக ஒப்பந்த வாக்களிப்பை ஆரம்பிக்கின்றனர்.

Air கனடா விமான சேவை நிறுவனத்துடன் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை (19) அறிவித்தது.

இந்த மூலம் மூன்று தினங்கள் தொடர்ந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

இந்த ஒப்பந்தம் விமானப் பணியாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நிலையில் வாக்களிப்பு புதன்கிழமை ஆரம்பிக்கிறது.

இந்த நிலையில் விமான பணியாளர்கள் இந்த  ஒப்பந்தத்தை வாக்களிப்பின் மூலம் நிராகரிப்பார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிக ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்ட ஊதியம் குறித்த அதிருப்தி காரணமாக இந்த வாக்களிப்பு, Air கனடா விமான சேவைக்கு எதிராக அமையக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

ஊதிய முன்மொழிவை நிராகரிப்பது வேலை நிறுத்த நடவடிக்கைக்கு வழிவகுக்காது எனவும், இந்த விடயம் நடுவர் மன்றத்திற்கு செல்லும் எனவும் கனடிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்தது.

Related posts

ஒரு வாரத்தில் எரிபொருள் லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

அமெரிக்காவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா எப்போதும் தயார்: Mark Carney

Lankathas Pathmanathan

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment