September 2, 2026
தேசியம்
செய்திகள்

Harrow நகரில் நான்கு பேர் சடலமாக மீட்பு

தென்மேற்கு Ontario நகரில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Windsor நகருக்கு தெற்கே உள்ள Harrow நகரில் நான்கு பேர் இறந்த நிலையில் Ontario காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.

Ontario மாகாண காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை (20) இந்த சடலங்கள் மீட்கப்பட்டன.

பலியானவர்கள் ஒரு ஆண், பெண், இரண்டு குழந்தைகள் என Essex நகர முதல்வர் Sherry Bondy கூறினார்.

இவர்களின் மரணத்திற்கான காரணம் பலியானவர்களின் அடையாளங்கள் ஆகியன இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனால் பொது மக்கள் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

Related posts

கனடியரின் கொலையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு?

Lankathas Pathmanathan

கனடாவில் மயில்வாகனம் நிமலராஜனின் இருபத்தைந்தாவது ஆண்டு நினைவேந்தல்

Lankathas Pathmanathan

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Gaya Raja

Leave a Comment