தேசியம்
செய்திகள்

சரக்கு வாகன ஓட்டுனர்களின் போராட்டம் வன்முறையாக மாறக்கூடும்: பிரதமர்

இந்த வார இறுதியில் கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடக்கவிருக்கும் போராட்டத்தின் போது வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலையடைவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.
சரக்கு வாகன ஓட்டுனர்களின் பாரிய போராட்டம் குறித்து தேசிய அரசியல் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஆளும் Liberal அரசாங்கமும், NDP கட்சியும்  இந்த நிகழ்வு வன்முறையாக மாறுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் வன்முறையாக மாறக்கூடும் என பிரதமர் Trudeau கவலை தெரிவித்தார்.

சுதந்திர பேரணி என அழைக்கப்படும் இந்த தொடரணியினரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக Conservative தலைவர் Erin O’Toole  அறிவித்தார்.

மக்கள் கட்சித் தலைவர் Maxime Bernier, Ontario கட்சித் தலைவர் Derek Sloan ஆகியோர் இந்த வாகனத் தொடரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related posts

NDP தேசிய மாநாட்டில் Jagmeet Singh தலைமைத்துவம் குறித்த வாக்கெடுப்பு!

Lankathas Pathmanathan

CTC ஆலோசனை சபை உறுப்பினர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment