September 3, 2026
தேசியம்
செய்திகள்

பிரதமர் Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்!

பிரதமர் Justin Trudeau இன்றைய Remembrance தின நிகழ்வில் தாமதமாக கலந்து கொண்டார்.

Ottawaவில் நடைபெற்ற தேசிய நினைவு தின நிகழ்வு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி அடையாளம் காணப்பட்டதால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாக RCMP கூறுகிறது.

நினைவு தின நிகழ்விற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, RCMP அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் அடைப்படையில் குறிப்பிட்ட பொதி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இதன் காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பிரதமர் Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோர் தாமதமாகவே சென்றடைந்தனர்.

Related posts

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

Gaya Raja

Ontario அரசின் காசோலைகள் விரைவில் அனுப்பப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment