Conservative தலைவர் Pierre Poilievre தனது நிலைப்பாடுகளை மிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை Erin O’Toole வலியுறுத்தினார்.
பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal கட்சியுடன் போட்டியிடுவதற்கு, Pierre Poilievre தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என முன்னாள் Conservative தலைவர் Erin O’Toole தெரிவித்தார்.
“அதிகமான கனடியர்களை சென்றடைவதற்காக, அவர்கள் சில நிலைப்பாடுகளை மிதப்படுத்த வேண்டும் என நான் நம்புகிறேன் ” என தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறினார்.
அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் Pierre Poilievre சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என Erin O’Toole தெரிவித்தார்.
கட்சித் தாவல்களையும் புறக்கணித்துவிட்டு, கனடியர்களின் நீண்டகால செழிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அவர் கட்சியை வலியுறுத்துகிறார்.
அடுத்த பொதுத் தேர்தலில் Conservative கட்சியை Pierre Poilievre வழிநடத்துவார் எனவும் Erin O’Toole நம்பிக்கை தெரிவித்தார்.
கனடா-அமெரிக்க பொருளாதார உறவுகள் குறித்த பிரதமரின் ஆலோசனைக் குழுவில் Erin O’Toole கடந்த செவ்வாய்க்கிழமை (21) இணைந்தார்.
பிரதமரை ஒரு புத்திசாலியும் பேரார்வம் மிக்க கனடியரும் என Erin O’Toole குறிப்பிட்டார்.
Justin Trudeau-வுக்கு எதிராக Conservative கட்சியினர் கையாண்ட பழைய தந்திரங்கள் இவரிடம் பலிக்காது என தெரிவித்த அவர், Conservative கட்சியினர் இதை ஒப்புக்கொண்டு ஒரு புதிய உத்தியை அமைப்பது சிறந்தது என Erin O’Toole குறிப்பிடுகிறார்.
அமெரிக்கா உடனான கனடாவின் உறவு நிலை, உலகின் தற்போதைய நிலையை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது, நாடாளுமன்றத்தில் ஓரளவுக்கு ஸ்திரத்தன்மை இருப்பது சரியானது என்றே நான் உண்மையில் கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2020 முதல் 2022 வரை Conservative கட்சிக்கு Erin O’Toole தலைமை தாங்கினார்.
2021 பொதுத் தேர்தலில் Justin Trudeau தலைமையிலான Liberal கட்சியிடம் அவர் தோல்வியடைந்தார்.
தலைநகர் Ottawa-வின் மையப்பகுதியில் நடந்த சுதந்திரப் பேரணியின் போராட்டத்தின் போது, அவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு Conservative கட்சிக் குழு வாக்களித்ததை தொடர்ந்து Erin O’Toole பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
