February 16, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்க பொருட்கள் மீது கனடா 25 சதவீத வரி!

155 பில்லியன் டாலர் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதிக்கிறது.

கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம் வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆரம்பித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (04) முதல் அமுலுக்கு வரும் என Donald Trump நிர்வாகம் கனடிய அரசுக்கு சனிக்கிழமை (01) காலை அறிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது.

பிரதமர் Justin Trudeau சனி இரவு இந்த பதில் நடவடிக்கையை அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இருந்து கனடியர்களுக்கு ஆற்றிய உரையில் மத்திய அரசாங்கத்தின் படிப்படியான அணுகுமுறையை அவர் அறிவித்தார்.

இந்த வர்த்தக நடவடிக்கை குறித்து அமெரிக்கா ஜனாதிபதியுடன் இதுவரை உரையாடவில்லை என பிரதமர் கூறினார்.

கனடாவின் பதில் நடவடிக்கைகளில் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் மீது உடனடி வரிகள் செவ்வாய் முதல் விதிக்கப்படும் என Justin Trudeau தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 21 நாட்களில் 125 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த கால அவகாசம் கனடிய நிறுவனங்கள் மாற்று வழிகளை கண்டறிய அனுமதிக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

கனடாவில் 30 ஆயிரம் ஆப்கானியர்களின் மீள்குடியேற்றம்

Lankathas Pathmanathan

RCMP அதிகாரி மீது வாகனத்தால் மோதிய நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

Air India விமான சேவைக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment