தேசியம்
செய்திகள்

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: Melanie Joly

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் Melanie Joly பெயரும் அடங்கியிருந்தது.

ஆனாலும் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை அமைச்சர் Melanie Joly அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரியாகியுள்ள Donald Trump முன்வைத்துள்ள
கனடிய பொருட்களுக்கான 25 சதவீத வரி குறித்து தனது முதன்மையான கவனம் தொடர்ந்து இருக்கும் என தனது முடிவு குறித்து Melanie Joly குறிப்பிட்டார்.

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Related posts

இலங்கை வெளியிட்ட நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் – கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கை

Gaya Raja

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

Lankathas Pathmanathan

Torontoவுக்கான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan

Leave a Comment