தேசியம்
செய்திகள்

தற்காலிகமாக PST வரியை நீங்க Ontario அரசாங்கம் முடிவு

பொருட்கள் சிலவற்றின் மீதான மாகாண விற்பனை வரியை (Provincial Sales Tax -PST) நீக்க Ontario மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போதைய மாகாண தள்ளுபடிகளில் உள்ளடக்கப்படாத பொருட்களிலிருந்து PST வரியை நீக்க Doug Ford அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் இரண்டு மாத GST தள்ளுபடி காலத்தில் தனது PST வரியை நீக்க Ontario மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Ontario மாகாண நிதி அமைச்சர் Peter Bethlenfalvy இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு 1 பில்லியன் டாலர் வரையிலான கூடுதல் நிவாரணத்தை வழங்கும் என அமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.
மத்திய அரசாங்கத்துடன் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.
புதிய வருடத்தில் Ontario அரசாங்கம் வரி செலுத்துவோருக்கு 200 டொலர் கொடுப்பனவுகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த அறிவித்தலை அண்மையில் முதல்வர் Doug Ford வெளியிட்டிருந்தார்.
இதற்கு மேலதிகமாக குறிப்பிட்ட PST வரியா நீக்கம் அமையும் என Doug Ford அரசாங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசாங்கமும் தனது பங்கிற்கு புதிய ஆண்டில் 250 டொலர் கொடுப்பனவுகளை வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்

Lankathas Pathmanathan

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிவாயு விலை

Lankathas Pathmanathan

Leave a Comment