தேசியம்
செய்திகள்

Nova Scotia மாகாண தேர்தலில் Progressive Conservative வெற்றி

Nova Scotia மாகாண தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக Progressive Conservative கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைக்கிறது.
Progressive Conservative தலைவர் Tim Houston, இரண்டாவது முறையாக முதல்வராகிறார் .
இம்முறை NDP உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அமைகிறது.
மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.
நான்கு வார பிரச்சாரத்தின் பின்னர், தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது.

July 15, 2025 அன்று நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதிக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது.

Liberal தலைவர் Zach Churchill, NDP தலைவர் Claudia Chenderled ஆகியோர் முதல் தடவையாக தமது கட்சிகளை தேர்தலில் தலைமை தாங்கினர்.

55 தொகுதிகளை கொண்ட மாகாண சபை கலைக்கப்படும் போது Progressive Conservative 34, Liberal 14, NDP 6 ஆசனங்களை கொண்டிருந்தது.

ஒரு சுயேச்சை உறுப்பினரும் மாகாண சபையில் இருந்தார்.

Related posts

Kamloops வதிவிடப் பாடசாலை புதைகுழிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகாது!!

Gaya Raja

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

ஆயிரக்கணக்கான கனேடியர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment