தேசியம்
செய்திகள்

Air Canada இந்த வாரம் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை?

வேலை நிறுத்தம் காரணமாக Air Canada நிறுவனம் வெள்ளிக்கிழமை (13) முதல் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது.

Air Canada விமானிகள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான திட்டங்களில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

திங்கட்கிழமை வெளியான ஒரு அறிக்கையில் Air Canada தலைமை நிர்வாக அதிகாரி Michael Rousseau இந்த தகவலை வெளியிட்டது.

இந்த வேலை நிறுத்தத்தால் Air Canada பயணிகள் 80 சதவீதம் பேர் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (15) இருதரப்பு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஆரம்பிக்கும் நிலையில், புதன்கிழமைக்குள் (18) விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

Related posts

ஹரி ஆனந்தசங்கரியின் தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

Gaya Raja

சீனாவுக்கு எதிரான கனடாவின் பொருளாதாரத் தடை

Gaya Raja

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment