Ontario மாகாணத்தின் Scarboroughவில் புகையிரத பாதையில் சிக்கிய வாகனம் ஒன்றில் பயணித்த நான்கு பேரை காப்பாற்றியதற்காக தமிழரான TTC பேரூந்து சாரதி பாராட்டப்படுகின்றார்.
கடந்த வியாழக்கிழமை (02) மாலை Finch Avenue – Kennedy Road சந்திப்புகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
GO புகையிரத பாதையில் நான்கு வயோதிபர்கள் பயணித்த வாகனம் சிக்கிய நிலையில் அவர்களை Toronto போக்குவரத்து சபையின் பேரூந்து சாரதி பாதுகாப்பாக மீட்டுள்ளார்.
மோகன்ராஜ் இராஜதுரை என்ற தமிழரான TTC பேரூந்தின் சாரதி இந்த உயிர் காக்கும் உதவிக்காக பலராலும் பாராட்டப்படுகின்றார்.
மீட்கப்பட்ட நான்கு வயோதிபர்களும் பயணித்த வாகனம் சில நிமிடங்களில் அந்த பாதையில் Stouffville நோக்கி பயணித்த GO புகையிரதத்தால் மோதப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த உதவிக்காக மோகன்ராஜ் இராஜதுரைக்கு முறையான பாராட்டு வழங்கப்படும் என TTC தெரிவித்தது.