தேசியம்
செய்திகள்

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் புதிய திட்டம்

இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் கனடிய அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான International Experience Canada என்ற புதிய திட்டம் வியாழக்கிழமை (01) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை குடிவரவு, அகதிகள் குடியுரிமை அமைச்சர் Sean Fraser வெளியிட்டார்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் 20 சதவீத அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

IEC எனப்படும் இந்த திட்டம், கனடிய இளைஞர்கள் வெளிநாடுகளிலும் சர்வதேச இளைஞர்கள் கனடாவிலுல் வேலை செய்யவும் பயணம் செய்யவும் அனுமதிக்கிறது.

இந்த திட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் January 9ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்.

இந்த அதிகரிப்பு 90 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் கனடாவில் வேலை செய்யவும் பயணம் செய்யவும் அனுமதிக்கிறது.

Related posts

November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் எச்சரிக்கை

Gaya Raja

Scarborough Centre தொகுதியில் மாகாணசபை தேர்தல் வேட்பாளராகும் நீதன் சான்!

Lankathas Pathmanathan

Leave a Comment