தேசியம்
செய்திகள்

James Smith Cree முதல் குடியிருப்புக்கு அமைச்சர் Mendicino விஜயம்

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino அடுத்த வாரம் James Smith Cree முதல் குடியிருப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

முதல் குடியிருப்பு பகுதியின் காவல்துறையை அத்தியாவசிய சேவையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற Liberal அரசாங்கத்தின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முதல் குடியின மக்களுக்கு முதல் குடியின மக்களால் காவல்துறை என்பது நல்லிணக்கத்தின் முக்கிய பகுதியாகும் என அமைச்சர் கூறினார்.

James Smith Cree முதற்குடியிருப்பில் நிகழ்ந்தது போன்ற ஒரு நிகழ்வு இனியும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி, James Smith Cree முதற்குடியிருப்பிலும் அருகிலுள்ள Weldon கிராமத்திலும் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில், 11 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டது தவறு: Trudeau

Gaya Raja

கனேடிய விமானப் பயண துறையில் போட்டி அவசியம்: NDP

Lankathas Pathmanathan

Leave a Comment