தேசியம்
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவரின் மனைவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மனைவி Anaida Poilievreக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் தொடர்பாக RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

Conservative கட்சியின் தலைவரின் மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டும் என வார இறுதியில் வெளியான video ஒன்றில் ஒருவர் தெரிவித்திருந்தார்.

தீவிர வலதுசாரி குழுவின் நிறுவனர் Jeremy MacKenzie என்பவரே இந்த கருத்துக்களை வெளியிடவராவார்.

தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வது குறித்து ஒருவர் தெரிவித்த அருவருப்பான கருத்துக்கள் குறித்து விசாரணை முன்னெடுக்குமாறு Conservative தலைவர் Pierre Poilievre, RCMPயிடம் கோரியுள்ளார்.

36 வயதான MacKenzie, “Diagolon” என்ற இணைய குழுவின் நிறுவனர் ஆவார்.

இந்த குழு Freedom Convoy எனப்படும் எதிர்ப்பு போராட்ட குழுவுடன் தொடர்புகளை பேணி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்தை தெரிவிக்கும் போது மதுபோதையில் இருந்ததாகவும், எவருக்கும் தீங்கும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் Canadian Press ஊடகத்திடம் திங்கட்கிழமை (26) பிற்பகல் MacKenzie கூறினார்.

Related posts

Pope தனது கனடிய பயணத்தில் முதற்குடியினர் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கும் செல்வார்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு விசாரணையை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு?

Lankathas Pathmanathan

குலுக்கல் முறையில் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment