தேசியம்
செய்திகள்

உக்ரைன் போர்: மேலும் 22 பேர் கனடாவால் தடை

உக்ரைன் போர் தொடர்பாக கனடாவால் தடை செய்யப்படுபவர்களின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 22 நபர்களில் ரஷ்ய அதிபர் Vladimir Putinனின் காதலி என நம்பப்படும் ஒரு பெண்ணும் அடங்குகின்றார்.
கனடா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு ஒவ்வொரு வாரமும் புதிய நபர்களை தடை செய்யப்படும் பட்டியலில் இணைப்பதாக வெளியுறவு அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு முதல் 1,500க்கும் மேற்பட்ட தனிநபர்களும் நிறுவனங்களையும்  கனடா தடை செய்துள்ளது.

ரஷ்யாவை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் தனிமைப்படுத்துவது கனடாவின் குறிக்கோள் என அமைச்சர்  Joly  கூறினார்.

Related posts

British Colombia : தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 1,200 வரை அதிகரிக்கலாம்!!

Gaya Raja

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும்: NACI

Lankathas Pathmanathan

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டியது அவசியம்

Leave a Comment

error: Alert: Content is protected !!