தேசியம்
செய்திகள்

முக்கிய வட்டி விகிதம் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும்

முக்கிய வட்டி விகிதம் விரைவில் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும் என மத்திய வங்கி கூறுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, கனடாவின் முக்கிய வட்டி விகிதம் June மாதத்தில் மேலும் அரை சதவிகிதம் உயரக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்  மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை அரை சதவீதம்  அதிகரித்தது.

இரண்டு சதவீத பணவீக்க இலக்கை நோக்கிச் செயல்படுவதால், மேலும் வட்டி விகித உயர்வுகளை எதிர்பார்க்குமாறு  மத்திய வங்கி எச்சரித்திருந்தது.

கனடாவின் பணவீக்க விகிதம் March மாதத்தில் மூன்று தசாப்தங்களில் அதிகபட்சமாக 6.7 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும்: முதல்வர் Ford

Paris Paralympics: எட்டாவது நாள் இரண்டு தங்கப் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் கடுமையான குளிர் நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment