தேசியம்
செய்திகள்

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு விதித்துள்ளது .

இதில் பிரதமர் Justin Trudeau அரசாங்கத்தின் உயர்மட்ட ஊழியர்கள், மாகாண முதல்வர்கள், நகர சபை முதல்வர்கள், பத்திரிகையாளர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் அடங்குகின்றனர்

செல்வாக்கு மிக்க ரஷ்யர்கள் மீது கனடா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்ததற்கு நேரடி பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது
வியாழக்கிழமை (21) தடை உத்தரவு விதிக்கப்பட்டவர்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடிய தூதர் Bob Rae,  Ontario, Manitoba, Saskatchewan, Alberta, British Columbia ஆகிய ஐந்து மாகாணங்களின் முதல்வர்கள், Toronto, Ottawa நகரங்களின் முதல்வர்களும் அடங்குகின்றனர் .

தவிரவும் கனடிய மத்திய வங்கியின் ஆளுநர், பிரதமர் Trudeau, துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோரின் தலைமை அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் .

இந்த தடை உத்தரவு பட்டியலில் கனடாவின் உயர் பாதுகாப்பு, இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்ளன.

ரஷ்யாவின் சமீபத்திய பொருளாதாரத் தடை பட்டியலில்  CTV, CBC,  Globe and Mail ஆகிய ஊடக நிறுவனங்களின் தலைமை உறுப்பினர்களும்  அடங்குகின்றனர்.

Related posts

COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும்

Lankathas Pathmanathan

இராணுவத்தினரின் உதவியுடன் மூடப்படவுள்ள ஆப்கானிஸ்தான் கனேடிய தூதரகம்!

Gaya Raja

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment