தேசியம்
செய்திகள்

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்வதற்கான உத்திகளை காவல்துறையினரும் அதிகாரிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.
Ottawaவில் இந்த வார இறுதியில் மேலும் போராட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தலைநகரின் தொடரும் எதிர்ப்பை ஒரு போராட்டம் அல்ல, ஒரு ஆக்கிரமிப்பு என கனடிய முதல்வர்களுடனான மெய்நிகர் சந்திப்பின் போது Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறிய Ford, இந்த ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இதுவெனவும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக  தலைநகரில் தொடரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் புதிய உத்தியை ஆரம்பிப்பதாக Ottawa காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

Torontoவில் எதிர்பார்க்கப்படும் போராட்டத்திற்கான செயல்பாட்டுத் திட்டங்களை காவல்துறையினரும், நகர முதல்வரும் வெள்ளிக்கிழமை (04) அறிவித்தனர்.

இந்த வார இறுதியில் Ontario மாகாண சபைக்கு முன்பாக எதிர்பார்க்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னதாக மருத்துவமனை பகுதியை பாதுகாப்பதற்கான நகர்வுகளை  Toronto காவல்துறை எடுத்துள்ளது.

இந்த வார இறுதியில் Toronto downtown பகுதியில் அதிகரித்த காவல்துறையினரின் பிரசன்னத்தை பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என Toronto காவல்துறைத் தலைவர்தெரிவித்தார்.

இதேவேளை   Quebec  நகரில் எதிர்ப்பாளர்கள் தங்கள் இரண்டாவது நாள் ஆர்ப்பாட்டங்களை வெள்ளிக்கிழமை தொடர்ந்தனர்.

Related posts

கனடா- அமெரிக்கா உறவின் நட்பும் உறுதியும் தொடரும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கு 10 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் கனடா!

Gaya Raja

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment