தேசியம்
செய்திகள்

கனடாவில் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்

BA.2 எனப்படும் புதிய Omicron துணை திரிபின் 50க்கும் மேற்பட்ட தொற்றுக்களை கண்டறிந்துள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.

BA.2 துணை திரிபின் 51 தொற்றுக்கள் கனடாவில் பதிவாகியுள்ளதாக கூறும் பொது சுகாதார நிறுவனம், இவை பிரதானமாக சர்வதேச பயணிகளிடம் இருந்து பரவுவதாக உறுதிப்படுத்தியது.

அனைத்து புதிய COVID திரிபுகளை போல் BA.2 துணை திரிபையும் கண்காணித்து வருவதாக பொது சுகாதார நிறுவனம் கூறியது.

பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கனடியர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும்   பொது சுகாதார நிறுவனம் வலியுறுத்துகின்றது.

பொது சுகாதாரம்  நடவடிக்கைகளுடன் இணைந்து தடுப்பூசி பெறுவது, COVID தொற்றுப் பரவலைக் குறைக்க முக்கியமானது என்பதை கனடா அரசாங்கம் அறிந்திருக்கிறது எனவும்  பொது சுகாதார நிறுவனம்  குறிப்பிடுகின்றது.

Related posts

பொதுச் சேவைக் கூட்டணியின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Paris Olympics: இரண்டாவது பதக்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

Gaya Raja

Leave a Comment