தேசியம்
செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை கனடா மறுபரிசீலனை

Omicron திரிபின் பரவல் மத்தியில் 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை கனடா மறுபரிசீலனை செய்கிறது.

10 ஆப்பிரிக்க நாடுகளின் பயணத் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் கனடா அதனை மறுபரிசீலனை செய்கிறது.

இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய கொள்கை என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam கூறினார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி  கனடிய அரசாங்கம் ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடை விதித்தது.

தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு தடை

அதன் பின்னர் 30ஆம் திகதி மேலும் மூன்று நாடுகள் இந்த தடை பட்டியலில் இணைக்கப்பட்டன.

அரசாங்கம் அதன் எல்லை நடவடிக்கைகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும், 10 நாடுகளின் பட்டியல் உட்பட பிற பரிசீலனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன எனவும்  போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra  செய்தியாளர்களிடம் கூறினார்.

Related posts

கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia முடிவு

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Markham- Thornhill தொகுதி Conservative கட்சி வேட்பாளர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment