தேசியம்
செய்திகள்

ஆறு மாதங்களின் பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

கடந்த May மாதத்தின் பின்னர் முதல் முறையாக Ontarioவில் ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகின.
இன்று மொத்தம் 1,031 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

அதிகமான தொற்றின் எண்ணிக்கையானது ஆபத்தானதாக தோன்றினாலும், அது எதிர்பாராதது அல்ல என சுகாதார அமைச்சர் Christine Elliott  கூறினார்.  கடந்த வாரம் 711 ஆக இருந்த புதிய தொற்றின் ஏழு நாள் சராசரி இப்போது 866 ஆக அதிகரித்தது.

மேலும்  நான்கு மரணங்களும் Ontarioவில் பதிவாகின.

Ontarioவில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

Related posts

Ontario மாகாண தேர்தலில் Liberal தவிர ஏனைய பிரதான கட்சி தலைவர்கள் வெற்றி!

Lankathas Pathmanathan

இஸ்ரேலிய இராஜதந்திரிகள் கனடாவில் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் June 26?

Lankathas Pathmanathan

Leave a Comment