தேசியம்
செய்திகள்

Iqaluit சமூகத்தின் நீர் நெருக்கடி அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும்: Jagmeet Singh

Iqaluit சமூகத்தின் தற்போதைய தண்ணீர் அவசர நிலையை சரிசெய்வதற்கான செலவை Liberal அரசாங்கம் செலுத்த வேண்டும் என NDP தலைவர் கோரியுள்ளார்.

Iqaluit  நீர் நெருக்கடிக்கு 180 மில்லியன் டொலர் செலவை மத்திய அரசு செலுத்த வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh கோரியுள்ளார்.

Nunavut தலைநகரில் வசிக்கும் 8,000 பேர், கடந்த October 12ஆம் திகதி முதல் குழாய் நீரில் எரிபொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதில் இருந்து அதனை உபயோகிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

பிராந்திய மற்றும் நகராட்சி அரசாங்கங்கள் இந்த சிக்கலை நிரந்தரமாக சரி செய்ய 180 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாக செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Singh கூறினார்.

Ottawa அல்லது Vancouver போன்ற பெரிய நகரங்களில் இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டால், அதனை சரிசெய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார் .

இதேபோன்ற அவசரநிலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, Iqaluitஇன் நீர் உள்கட்டமைப்புக்கு நிரந்தர மேம்படுத்தல் தேவை எனவும் Singh கூறினார்.

Related posts

Conservative கட்சித் தலைவர் பதவிக்கு Poilievre சிறந்த தெரிவு: முன்னாள் பிரதமர் Harper

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் ,மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley இராஜினாமா!

Gaya Raja

பாதிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் கட்டாய தடுப்பூசிகளுக்கு ஆதரவு!

Gaya Raja

Leave a Comment