தேசியம்
செய்திகள்

Albertaவும் British Colombiaவும் மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை விரிவுபடுத்துகிறது!

COVID மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு Albertaவும் British Colombiaவும் விரிவுபடுத்துகிறது.

புதன்கிழமை முதல் 75 வயதுக்கு மேற்பட்டவர்களும், முதற்குடியினர், இன்யூட் அல்லது மெட்டிஸ் மக்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம் என Alberta முதல்வர் Jason Kenney அறிவித்தார்.

அவர்களின் இறுதி தடுப்பூசியில் இருந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க வேண்டும் என்பது மாத்திரம் இவர்களுக்கான நிபந்தனையாக உள்ளது.

இதன் மூலம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் October மாத இறுதிக்குள் Albertaவில் மூன்றாவது தடுப்பூசிக்கு தகுதி பெறுகின்றனர்.

இதேவேளை ஒரு இலட்சம் பேர் தகுதி பெறும் வகையில் மூன்றாவது தடுப்பூசியை பெறக்கூடியவர்களுக்கு அறிவித்தல் ஒன்றை British Colombia விடுத்துள்ளது .

Related posts

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடிய அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan

மீண்டும் ஆர்மபித்த நாடாளுமன்ற அமர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment