தேசியம்
செய்திகள்

புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வர வேண்டாம் என ஊக்கப்படுத்துங்கள்: பிரதமரிடம் Quebec முதல்வர் கோரிக்கை

புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வர வேண்டாம் என ஊக்கப்படுத்துமாறு கனடிய பிரதமரிடம் Quebec முதல்வர் கோரியுள்ளார்.

துன்புறுத்தலில் இருந்து தப்பியோடி வரும் மக்களை கனடா வரவேற்கும் என Justin Trudeau தெரிவித்த கருத்து  கனடாவில் பலர் தஞ்சம் கோருவதான காரணமாக தான் கருதுவதாக Francois Legault கூறினார்.

அமெரிக்காவில் இருந்து Quebec மாகாணத்திற்குள் நுழையும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் என Quebec குடிவரவு அமைச்சர் Christine Fréchette செவ்வாய்கிழமை (14) தெரிவித்திருந்தார்.

வார இறுதியில் Quebec ஊடாக கனடாவிற்குள் நுழைந்த சுமார் 380 பேரில் எட்டு பேர் மட்டுமே Quebec மாகாணத்தில் தங்கியிருந்ததாக அமைச்சர் கூறினார்.

ஏனையவர்கள் Ontario உட்பட கனடாவின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கனடாவிற்கான அமெரிக்க தூதரை சந்தித்த Quebec  முதல்வர், பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் குறித்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார்.

Related posts

Ontarioவில் வீடு வாங்கும் வெளி நாட்டவர்களுக்கு வரி அதிகரிப்பு

Lankathas Pathmanathan

தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள் தேர்வில் மோசடி செய்ததற்காக வீடு விற்பனை உரிமையை இழந்தனர்!

Lankathas Pathmanathan

மாத இறுதியில் Ontarioவில் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment