தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

15 மாதங்களில் முதல் முறையாக அமெரிக்காவுக்கான கனடியர்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கனடியர்கள் அமெரிக்கப் பயணங்களைத் தவிர்க்க ஆரம்பித்து சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், இந்தப் பயணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய தரவுகள் காட்டுகின்றன.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (23) வெளியிட்ட தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியானது.

April மாதத்தில் அமெரிக்கா சென்று மீண்டும் கனடா திரும்பும் கனடியர்களின் பயணங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது January 2025-க்குப் பின்னர் ஏற்படும் முதல் அதிகரிப்பு ஆகும்.

இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் வாகன பயணங்களாகும்.

வாகன பயணங்கள் 8.1 சதவீதம் அதிகரித்து 1.5 மில்லியனாக உயர்ந்தது.

அவற்றில் 65 சதவீதம் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஆகும்.

ஆனாலும் விமானம் மூலமான இருவழிப் பயணங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீதமாக குறைந்து 805,900 ஆக உள்ளது.

மொத்தத்தில், கனடியக் குடிமக்கள் April மாதத்தில் அமெரிக்காவிற்கு 24 லட்சம் பயணங்களை மேற்கொண்டனர்.

இதற்கு மாறாக, March மாதத்தில், கனடியர்கள் அமெரிக்காவிற்கு 26 லட்சம் பயணங்களை மேற்கொண்டனர்.

இது ஓராண்டுக்கு முந்தைய இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.4 சதவீதம் குறைவாகும்.

Related posts

தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் COVID உதவித் தகுதிகளை தற்காலிகமாக விரிவுபடுத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு!

Lankathas Pathmanathan

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

Leave a Comment