அனைத்துலகத் தமிழர் பேரவையின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்த முதலாவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடாக இந்த மாநாடு நடைபெறவுள்ளது என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தேசியத்திடம் தெரிவித்தார்.
உலகின் முன்னணி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள், சமூகத் தலைவர்களுடன் இணைந்து, மீட்பு, முன்னேற்றம் உள்ளடக்கிய வளர்ச்சியை மையமாகக் கொண்ட இந்த சர்வதேச ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
வெள்ளி மாலை ஆரம்பிக்கும் இந்த மாநாடு இரண்டு தினங்கள் Toronto பல்கலைக்கழக Scarborough வளாகத்தில் நடைபெறுகிறது.
மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (12) இரவு அனைத்துலகத் தமிழர் பேரவையின் வருடாந்த ஒன்றுகூடலும் வருடாந்த இராப்போசான விருந்தும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது .
