தேசியம்
செய்திகள்

பயங்கரவாத நிதியுதவி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள்

கனடாவின் ‘மிகப்பெரிய பயங்கரவாத நிதியுதவி திட்டம்’ தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளை Toronto நபர் ஒப்புக் கொண்டார்.

36 வயதான Khalilullah Yousuf இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

கனடிய வரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத நிதியுதவித் திட்டம் தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளில் இவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டதாக RCMP தெரிவித்துள்ளது.

September 2019 முதல் December 2022 வரை cryptocurrency பணப் பரிமாற்றங்களை அனுப்புவதன் மூலம் வெளிநாடுகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளித்ததாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

GoFundMe மூலம் $15,000 திரட்டியதாக ஒப்புக்கொண்ட அவர்,கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான Daesh-க்கு தொடர்புடைய பலருக்கு $35,000 நன்கொடை அளித்ததையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

பண மதிப்பின் அடிப்படையில் கனடாவில் இதுவரை பயங்கரவாத நிதியுதவி தொடர்பான மிகப்பெரிய தண்டனை இதுவாகும் என் RCMP ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது.

Related posts

பின்லாந்து ஜனாதிபதியை சந்திக்கும் Mark Carney

Lankathas Pathmanathan

அடுத்த மாதம் மூன்று மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

John Toryயின் பதவி விலகல் முடிவை மறுபரிசீலீக்க கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment