தேசியம்
செய்திகள்

தமிழ் பெண் பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு!

Markham நகர இல்லத்தில் தமிழ் பெண் பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

Markham நகர இல்லத்தில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 வயதான நிலக்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார்.

கடந்த மாதம் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

28 வயதான Aekwon Murray, 35 வயதான Heshmat Rasouli-Kalantarzade ஆகியோர் கைது செய்யப்பட்டதை York பிராந்திய காவல்துறை புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியது.

Aekwon Murray, March 21 அன்றும் இரண்டாவது சந்தேக நபரான Heshmat Rasouli-Kalantarzade, March 22 அன்றும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் முதல் நிலை கொலை, கொலை முயற்சி உட்பட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

கைதாகியுள்ள சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

புலனாய்வாளர்கள் இதை ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் சம்பவமாக கருதி விசாரணைகளை தொடர்கின்றனர்.

இந்த நிலையில் இதுவரை காவல்துறையினருடன் பேசாதவர்கள், அல்லது அந்தப் பகுதியில் இருந்து பாதுகாப்பு ஒலிப்பதிவுகளை வைத்திருப்பவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் German Shepherd வளர்ப்பு நாய் ஒன்றும் பலியானதுடன், 26 வயதான ஆண் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவர் பலியான பெண்ணின் சகோதரர் என தெரியவருகிறது.

March 7 வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு  48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

குறிப்பிட்ட இல்லம் கடந்த காலங்களில் பல முறை குறி வைக்கப்பட்டது என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

2018 ஆம் ஆண்டு முதல் இந்த இல்லத்தின் மீது குறைந்தது ஐந்து முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த வருடம் மாத்திரம் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் குறித்து விசாரித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan

நாடு திரும்பும் Hanta தொற்றால் பாதிக்கப்பட்ட கனடியர்கள்

Lankathas Pathmanathan

Justin Trudeau பதவி விலக வேண்டும் என மீண்டும் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment