தேசியம்
செய்திகள்

Toronto சமூக குடியிருப்பு கத்திக் குத்தில் ஒருவர் மரணம் – மூவர் கைது

Scarboroughவில் உள்ள Toronto சமூக குடியிருப்பு – Toronto Community Housing –  கட்டிடத்தில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தார்.

வியாழக்கிழமை (07) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவ இடத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரை Toronto காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் அவர் சம்பவ இடத்தில் மரணமானார்.

இதில் வேறு எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என Toronto அவசர உதவி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் ஒரு ஆண், இரண்டு பெண் என தெரியவருகிறது.

இதில் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

B.C. துப்பாக்கிச் சூட்டுடன் இந்திய அரசாங்கம் தொடர்பு?

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய் தணிகாசலம்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment