தேசியம்
செய்திகள்

கனடாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு  ஆதரவாக கூட்டம் ஒன்று கனடாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.

தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இவருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan

பணிக்குத் திரும்பிய LCBO ஊழியர்கள்

Lankathas Pathmanathan

150 கனேடியர்கள் இதுவரை சூடானில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment