February 16, 2025
தேசியம்
செய்திகள்

பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக $50 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த கனடா!

காசா, மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக 50 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா அறிவித்துள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen ஆகியோர் இரண்டு நாள் மாநாட்டிற்காக சனிக்கிழமை (21) எகிப்தின் கெய்ரோவை சென்றடைந்தனர்.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

காசாவில் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களை பலிகொண்ட இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து விவாதிக்க கனேடிய அதிகாரிகள் பல்வேறு பிரதிநிதிகளை சந்தித்தனர்.

இந்த மாநாட்டில் 50 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா அறிவித்துள்ளது.

காசா, மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ உதவி, உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக இந்த உதவி செல்லும் என வெளிவிவகார அமைச்சு சனியன்று வெளியான அறிக்கை கூறுகிறது.

இந்த உதவி ஹமாசுக்கு சொல்லாததை உறுதி செய்யவுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது.

“உயிர் காக்கும் உதவி தேவைப்படும் காசாவில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்கள் அதை விரைவில் பெறுவது மிகவும் முக்கியமானது” என கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கூறினார்.

இந்த நிதியானது துன்பப்படுபவர்களை சென்றடைவதை உறுதி செய்ய கனடா அதன் நம்பகமான, அனுபவம் வாய்ந்த மனிதாபிமான பங்காளிகளுடன் தொடர்ந்து பணியாற்றும்,” என அமைச்சர் Melanie Joly ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்தார்.

October 7 ஆம் திகதி நிகழ்ந்த ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து கனடா 10 மில்லியன் டொலர்களை மனிதாபிமான உதவியாக அனுப்பியுள்ளது.

தவிரவும் கனேடியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற உதவுவதற்காக Tel Avivவிலிருந்து 16 விமான சேவைகளை ஏற்பாடு செய்தது.

Related posts

இஸ்ரேலில் இருந்து கனேடியர்களுடன் முதலாவது விமானம் பயணம்!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 31ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

March 2023க்குள் 75 சதவீத கனடியர்கள் COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment