தேசியம்
செய்திகள்

மீண்டும் நாடு தழுவிய தாமதங்களை எதிர்கொண்ட Air Canada

Air Canada விமான நிறுவனம் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நாடு தழுவிய தாமதங்களை வியாழக்கிழமை (01) எதிர்கொண்டது.

விமானத் தகவல் தொடர்பில் தொழில்நுட்ப சவால்களை எதிர் கொண்டதாக Air Canada அறிவித்தது.

இதனால் நாடு முழுவதும் தாமதங்களை Air Canada விமான நிறுவனம் எதிர்கொண்டது.

விமானங்களுடன் தொடர்பு கொள்வதற்கும், அதன் செயல்பாடுகளின் செயல்திறனைக் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தும் முறையில் தற்காலிக தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டதாக Air Canada ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது.

வியாழன் மாலை இந்த தொழில்நுட்ப சவால்கள் தீர்க்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இதன் காரணமாக வியாழன் முழுவதும் விமான சேவையில் இடையூறுகள், பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுவதாக Air Canada கூறுகிறது.

Related posts

Conservative கட்சி தலைவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன

Lankathas Pathmanathan

ஏழு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்!

Lankathas Pathmanathan

PEI: கட்டாய COVID தனிமைப்படுத்தல் நடைமுறை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment