தேசியம்
செய்திகள்

கனடிய ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை ஏற்க முடியாது: கனடிய வெளியுறவு அமைச்சர்

கனடிய ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை கனடா எப்போதும் ஏற்காது என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற G20 நாடுகளின் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang உடன் கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly உரையாடினார்.

இந்த உரையாடலில் போது சீனாவின் தூதர்கள் கனேடிய விவகாரங்களில் தலையிடக்கூடும் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்.

எமது பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை மீறுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என சீன வெளியுறவு அமைச்சரிடம் கூறியதாக அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

இந்த விடயத்தில் Melanie Joly, நேரடியான, உறுதியான தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டார் என கனடிய வெளியுறவு அமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.

ஆனானும் கனடாவில் வெளியாகும் சீனா குறித்த விமர்சனங்கள் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் அல்ல என
சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang மறுத்துள்ளார்.

இருதரப்பு உறவை சீர்குலைக்கும் இதுபோன்ற வதந்திகளை தடுக்க வேண்டும் என கனடிய வெளியுறவு அமைச்சரிடம் சீன வெளியுறவு அமைச்சர் கூறியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது

அதேவேளை G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrovரையும் Melanie Joly சந்தித்தார்.

இந்த சந்திப்பில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு கனடாவின் கடுமையான எதிர்ப்பை Melanie Joly வெளியிட்டார்

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பணயக் கைதிகளாக வைத்திருப்பதை நிறுத்துங்கள் என Melanie Joly ரஷ்ய வெளிவிவகார அமைச்சரிடம் கூறினார்.

Related posts

நான்கு மாகாணங்களில் பதினேழு தட்டம்மை நோயாளர்கள்!

Lankathas Pathmanathan

கனடாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)

thesiyam

Leave a Comment