February 16, 2025
தேசியம்
செய்திகள்

குழந்தை பாலியல் வன்கொடுமை விசாரணையில் Toronto நபர் மீது 96 குற்றச்சாட்டுகள்

குழந்தை பாலியல் வன்கொடுமை விசாரணையில் Toronto நபர் ஒருவர் 96 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

31 வயதான Daniel Langdon என்பவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இந்த குற்றங்கள் April 2021 முதல் இந்த ஆண்டு February மாதம் வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை இவர் சமூக ஊடக தளங்கள் மூலம் தொடர்பு கொண்டதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு வயதுக் குழந்தை ஒன்றும் அடக்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இவர் மீது 2016ஆம் ஆண்டில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Justin Trudeau

Lankathas Pathmanathan

Booster தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

September வரை பாடசாலைகளை மூடி வைப்பது குறித்து Ontario ஆலோசிக்கிறது

Gaya Raja

Leave a Comment