தேசியம்
செய்திகள்

TikTok செயலி தடை குறித்த கட்சித் தலைவர்கள் நிலைப்பாடு

கனடிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்களில் TikTok செயலி தடைசெய்யப்பட்டுள்ளது குறித்து கட்சித் தலைவர்கள் தமது நிலைப்பாடுகளை வெளியிடுகின்றனர்

கனடா மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை (28) முதல் TikTok செயலி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Conservative தலைவர் Pierre Poilievre சமூக ஊடக செயலியான TikTok இல் தனது செயல்பாட்டை கைவிட்டுள்ளார்.

NDP தலைவர் Jagmeet Singh, தனது TikTok செயலியை செயலிழக்கச் செய்வதாக செவ்வாயன்று தெரிவித்தார்.

பிரதமர் Justin Trudeau TikTok செயலியை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

அதேவேளை Quebec மாகாண அரசு, mobile சாதனங்களில் செவ்வாய்க்கிழமை முதல் TikTok செயலியை தடை செய்துள்ளது.

அரசாங்க mobile சாதனங்களில் TikTok செயலியை பதிவிறக்கம் செய்யவும் பயன்படுத்தவும் Quebec அரசாங்கம் தடை விதித்துள்ளது.

British Columbia அரசாங்கமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட mobile தொலைபேசிகளுக்கு TikTok தடைகளை அறிவித்துள்ளது.

Related posts

தேர்தல் வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்களா? – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு!

Gaya Raja

November மாதம் 22 ஆரம்பிக்கும் நாடாளுமன்றம் – October மாதம் 26 வெளியாகும் அமைச்சரவை பட்டியல்!

Gaya Raja

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

Lankathas Pathmanathan

Leave a Comment