தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

கனடா மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை தகவல் அதிகாரி இந்த முடிவை எடுத்தார்.

இந்த செயலியின் பயனர்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கம் வழங்கிய அனைத்து mobile சாதனங்களிலிருந்தும் TikTok செயலியை அரசாங்கம் தடை செய்கிறது.

இந்த முடிவு ஒரு முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுவதாக கருவூல வாரியத்தின் தலைவர் Mona Fortier கூறினார்.

TikTok செயலிக்கு எதிரான கட்டுப்பாடுகளின் ஆரம்பமாக இந்த முடிவு இருக்கலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (28) முதல், TikTok செயலி தானாகவே அகற்றப்பட்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து mobile சாதனங்களிலும் பயன்படுத்தப்படாமல் தடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

TikTok செயலியை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது முடிவு குறித்து அரசாங்கம் எந்த விதமான கேள்விகளை தம்மிடம் முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre தனது TikTok கணக்கை திங்கட்கிழமை மாலை முதல் இடை நிறுத்தியுள்ளார்.

தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைப் பின்பற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Related posts

கனடியர்களின் சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை வலியுறுத்தும் எதிர்கட்சி தலைவர்

Lankathas Pathmanathan

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

Gaya Raja

வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க மத்திய வங்கி முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment