February 16, 2025
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண முதல்வரின் ஒப்புதல் மதிப்பீடு குறைந்தது

Doug Fordன் ஒப்புதல் நிலை மதிப்பீடுகள் மீண்டும் Ontario மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நான்கு புள்ளிகள் குறைந்துள்ளன.

இன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் Fordஇன் ஒப்புதல் மதிப்பீடுகள் இப்போது சுமார் 41 சதவீதமாக உள்ளதாக தெரியவருகிறது.

இது கடந்த June மாதத்தில் Progressive Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதிலிருந்து நான்கு புள்ளிகள் குறைந்துள்ளது.

COVID தொற்றின் ஆரம்பத்தில் Ford பெற்ற ஒப்புதல் மதிப்பீடுகளை விட இது கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த காலாண்டிற்கான ஒப்புதலின் அடிப்படையில் ஒன்பது கனடிய முதல்வர்களில் Ford ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Related posts

இரண்டு மாதங்களில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது!

Lankathas Pathmanathan

புதிய நிதியமைச்சரானார் Dominic Leblanc

Lankathas Pathmanathan

Ottawaவில் நோக்கி நகரும் பொது சுகாதார நடவடிக்கை எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment