தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற இலையுதிர் கால அமர்வு ஆரம்பமானது!

கனடிய நாடாளுமன்றத்தின் இலையுதிர் கால அமர்வு செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பமானது.

இந்த அமர்வின் ஆரம்பத்தில் Liberal அரசாங்கம் வாழ்க்கை செலவை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு சட்ட மூலங்களை தாக்கல் செய்துள்ளது.

Bill C-30, Bill C-31 ஆகியன செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய சட்டமூலங்களாகும்.

பிரதமர் Justin Trudeau இந்த மாதத்தின் ஆரம்பத்தில் உறுதியளித்த வகையில் இந்த சட்ட மூலங்கள் அறிமுகமாகின.

இந்த சட்டமூலத்தில் இடம்பெறும் குறைந்தது முதல் சாதாரண வருமானம் உள்ள குடும்பங்களை இலக்காகக் கொண்ட மூன்று அம்ச திட்டத்தின் விவரங்களை பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இவை கடந்த வாரம் பிரதமர் அறிவித்த 4.6 பில்லியன் டொலர் திட்டத்தின் பிரதான அம்சமாகும்.

Related posts

ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

ஐந்து வருட காலத்திற்குள் 252 பாடசாலை ஊழியர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

2022இல் இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது

Leave a Comment