தேசியம்
செய்திகள்

கனடாவின் அரச தலைவர் மறைவு – கனேடிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஆளுநர் நாயகம், பிரதமர் உட்பட கனேடிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கனடாவின் அரச தலைவரான மகாராணி எலிசபெத், தனது 96ஆவது வயதில் வியாழக்கிழமை (08) காலமானார்.

“உலகில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களில் ஒருவராக அவர் இருந்தார்” என மகாராணியின் மறைவு குறித்து பிரதமர் Justin Trudeau கூறினார்.

70 ஆண்டுகால ஆட்சியில் மகாராணி அனைத்து கனடியர்கள் மீதும் ஆழ்ந்த பாசம் கொண்டிருந்தார் என அவரது மரண அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது Trudeau தெரிவித்தார்.

12 கனடிய பிரதமர்கள், 13 ஆளுநர் நாயகங்களுடன் பணிபுரிந்த மகாராணியின் அர்ப்பணிப்பை ஆளுநர் நாயகம் Mary Simon ஒரு அறிக்கையில் நினைவு கூர்ந்தார்.

22 தடவைகள், அவர் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார் எனவும் Simon தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மகாராணியின் மறைவை குறிக்கும் வகையில் ஆளுநர் நாயகத்தின் உத்தியோக இருப்பிடமான Rideau Hallலில் உள்ள கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.

கனடிய மகாராணியின் இழப்பால் தேசம் துயருறுகிறது என Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen தனது இரங்களில் கூறினார்.

1982 இல் கனடாவின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனம் நிறுவப்பட்டபோது அரசியலமைப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டது உட்பட கனடாவின் அரச தலைவராக ராணியின் சாதனைகளை Bergen பாராட்டினார்.

வரலாற்றிலும் கடமையிலும் வாழ்ந்தவர் இரண்டாம் எலிசபெத் மகாராணி என NDP தலைவர் Jagmeet Singh அரச குடும்பத்திற்கான தனது இரங்கலில் தெரிவித்தார்.

மகாராணியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் CN Tower, Toronto குறியீடு ஆகியன வியாழன் இரவு இருளில் மூழ்கின.

Related posts

கனடா இப்போது தொற்றின் ஐந்தாவது அலையில் உள்ளது: NACI அறிக்கை

Lankathas Pathmanathan

கனடாவில் உறுதி செய்யப்பட்ட 276 Monkeypox தொற்றுகள்

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

Leave a Comment