தேசியம்
செய்திகள்

தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணம்

ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு தவிர வேறு மொழி பேசும் கனடியர்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணமாகிறது.

புதன்கிழமை (17) வெளியிடப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியானது.

ஆங்கிலம், பிரஞ்சு ஆகியவை கனடாவில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகளாக உள்ளன என கனடாவின் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கிறது.

ஆனால் வீட்டில் ஆதிக்கம் செலுத்தாத மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 4.6 மில்லியனாக அதிகரித்தள்ளது .

இது கனடிய மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதமாகும்.

இதற்கிடையில், குறைந்தது நான்கு கனடியர்களில் ஒருவர் ஆங்கிலம் அல்லது பிரஞ்சு தவிர வேறு ஒரு முதல் மொழியை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தெற்காசிய மொழிகள் அதிகம் பேசும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்த அதிகரிப்புக்கு காரணமாகும்.

Mandarin, Punjabi ஆகியவை மிகவும் பொதுவான அதிகாரப்பூர்வமற்ற மொழிகளாகும்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவற்றில் ஒன்றை பேசுகின்றனர்.

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பிரெஞ்சு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 2021 இல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

வீட்டில் பிரெஞ்சு மொழி பேசும் கனடியர்களின் விகிதம் Quebec உட்பட அனைத்து மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் புதன்கிழமை வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது.

Related posts

Toronto துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட Nova Scotiaவில் அவசர நிலை

Lankathas Pathmanathan

இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment