தேசியம்
செய்திகள்

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

நான்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை (19) வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ontario, Manitoba, Saskatchewan, Quebec உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கு செவ்வாயன்று சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டது.

இவற்றில் சில இடங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேற்கு, வடகிழக்கு Ontarioவின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை எட்டக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

தென்மேற்கு, தென்கிழக்கு Ontarioவிலும் இதே போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.

வடக்கு Manitobaவின் சில பகுதிகளில் வெப்ப எச்சரிக்கைகள் தொடர்ந்து அமுலில் உள்ளன.

தெற்கு Manitobaவின் சில பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Saskatchewanனில், வெப்ப எச்சரிக்கைகள் பெரும்பாலும் மாகாணத்தின் மத்திய, வடக்குப் பகுதிகளுக்கு மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பம், ஈரப்பதம் காரணமாக தெற்கு Quebecகின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உணரலாம் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

Related posts

அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டு  குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan

நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

Leave a Comment