தேசியம்
செய்திகள்

கனடியர்களின் உள்நாட்டு, சர்வதேச பயணங்களுக்கான தடுப்பூசி ஆணைகள் விலத்தல்

கனடியர்களின் உள்நாட்டு, சர்வதேச பயணங்களுக்கான தடுப்பூசி ஆணைகளை June மாதம் 20ஆம் திகதி முதல் கனடிய அரசாங்கம் விலத்துகிறது.

உள்நாட்டில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், வெளியூர் செல்லும் சர்வதேச பயணிகளுக்கு COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்ற தேவையை கனேடிய அரசாங்கம் கைவிடுகிறது.

ஆனாலும் ஏனைய அனைத்து மறு நுழைவுத் தேவைகளும் நடைமுறையில் இருக்கும் எனவும், அனைத்து பயணிகளும் தொடர்ந்து முகமூடிகளை அணிய வேண்டும் எனவும் செவ்வாய்க்கிழமை (14) அறிவிக்கப்பட்டது.

அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சர் Dominic LeBlanc, போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra, கருவூல வாரியத் தலைவர் Mona Fortier, சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட மாற்றம் தடுப்பூசி போடப்படாத கனடியர்கள் உள்நாட்டு அல்லது சர்வதேச இடங்களுக்குச் செல்லும் விமானங்களிலும் புகையிரதங்களில் பயணிக்க அனுமதி வழங்குகிறது.

வெளிநாட்டவர்கள் கனடாவிற்கு நுழைவதற்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஆனாலும் தற்போது கனடாவில் உள்ள வெளிநாட்டினர் தடுப்பூசி போடப்படாவிட்டாலும் நாட்டை விட்டு வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டது.

அதேவேளை மத்திய அரச ஊழியர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்குமான COVID தடுப்பூசி கட்டுப்பாடுகளை கனடிய அரசாங்கம் நீக்குகிறது.

தடுப்பூசி கட்டுபாடுகள் காரணமாக ஊதியம் இல்லாமல் தற்போது நிர்வாக விடுப்பில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணியை மீண்டும் ஆரம்பிக்க அவர்களின் மேலாளர்களால் தொடர்பு கொள்ளப்படுவார்கள் எனவும் செவ்வாயன்று தெரிவிக்கப்பட்டது.

வெற்றிகரமான தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக கனேடிய அரசாங்கம் கூறுகிறது.

தகுதியான கனேடியர்களில் 90 சதவீதமானவர்கள் COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இந்தஅறிவித்தல் என்பது COVID கட்டுப்பாடுகளின் முழுமையான நீக்குதலுக்கு சமமானதல்ல என Conservative கட்சியின் போக்குவரத்து விமர்சகர் Melissa Lantsman தெரிவித்தார்.

இந்த அறிவித்தல் குறித்து தம்மிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

Related posts

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

AstraZenecaவை தொடர்ந்து mRNA தடுப்பூசியை இரண்டாவதாக பெறலாம் – NACIயின் புதிய பரிந்துரை

Gaya Raja

மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்களை எதிர்கொள்ளும் கனடிய அரசாங்கம்!

Gaya Raja

Leave a Comment