தேசியம்
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னம்

வதிவிட பாடசாலைகளில் உயிர் பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு தேசிய நினைவுச் சின்னத்தை உருவாக்க கனேடிய மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
கனேடிய பாரம்பரிய அமைச்சர் Pablo Rodriguez இந்த திட்டத்தை ஒரு அறிக்கை மூலம் வெள்ளிக்கிழமை (29) அறிவித்தார்.
இந்த தேசிய நினைவுச் சின்னம் Ottawaவில் பிரதானமான இடத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நினைவுச் சின்னத்தின் வடிவமைப்பு, “உயிர் பிழைத்தவர்கள் தலைமையிலான வழிநடத்தல் குழு” என்ற அழைப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.
2015ஆம் ஆண்டு வெளியான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்  அறிக்கையில் இது போன்ற தேசிய நினைவுச் சின்னத்திற்கான தேவை வலியுறுத்தப்பட்டது.

Related posts

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் பிரதமர்

Lankathas Pathmanathan

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி நாடு திரும்பிய இரண்டு கனேடியர்கள் கைது

Lankathas Pathmanathan

Quebec சுகாதார அமைப்பு பலவீனமாக உள்ளது: பொது சுகாதார இயக்குனர்

Lankathas Pathmanathan

Leave a Comment