தேசியம்
செய்திகள்

உக்ரைன் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது: பிரதமர் Trudeau

ஐரோப்பிய தலைவர்கள் ஒன்றிணையவும், உக்ரைனுக்கு உதவவும், ரஷ்யாவுக்கு எதிராக மேலும் புதிய தடைகளை விதிககவும் கனடிய பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்தார்.

புதன்கிழமை (23) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்  பிரதமர் Trudeau உரையாற்றினார்.
உக்ரைனுக்கு மேலதிகமாக மனிதாபிமான உதவிகாலும், இராணுவ உபகரணங்களும் தேவை என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் Trudeau தனது உரையில் கூறினார்.
பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் பல ஆண்டுகளாக பரவி வருவதாக கூறிய Trudeau, அது இப்போது அதிகரித்து வரும் உலக பணவீக்கத்தால் தூண்டப்படுகின்றன என தெரிவித்தார்
உக்ரைன் மீதான ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putinனின் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது எனவும் அவர் கூறினார்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் மக்களுடன் கனடா துணை நிற்பதாக Trudeau கூறினார்
வியாழக்கிழமை பிரதமர் NATO  தலைவர்களுடன் இணைந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இராணுவ கூட்டணியின் பதில்  நடவடிக்கையை ஒருங்கிணைப்பார்.

வெள்ளிக்கிழமை கனடா திரும்பும் முன் G7 தலைவர்களின் கூட்டத்திலும் Trudeau பங்கேற்கவுள்ளார்.

Related posts

Carbon வரி உயர்வை எதிர்க்கும் முதல்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

அரசு முறை இறுதிச் சடங்கில் NDP முன்னாள் தலைவர் நினைவு கூறப்பட்டார்

Lankathas Pathmanathan

கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாக்கும் புதிய விதிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment