தேசியம்
செய்திகள்

Ontarioவில் 8ஆவது வருடமாக கொண்டாடப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்

தமிழர் சமூகத்திற்கான தனது பொங்கல் வாழ்த்தை Ontario மாகாண முதல்வர் Doug Ford வெளியிட்டுள்ளார்.

Ontarioவில் இந்த ஆண்டுடன் 8ஆவது வருடமாக தமிழ் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுகின்றது.

2014ஆம் ஆண்டு Ontario மாகாண சட்டசபையில் தமிழ் பாரம்பரிய மாதம் நிறைவேற்றப்பட்டது.

தைப்பொங்கலை ஒட்டி தமிழ் பாரம்பரிய மாத சட்டமூலம் Ontarioவில் நிறைவேற்றப்பட்டது.

எங்கள் மாகாணத்தில் உள்ள தமிழ் கனடியர்களின் வரலாறு, கலாச்சாரம், பங்களிப்புகளை கொண்டாட Ontario முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இணைவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என Ontario மாகாண எதிர்கட்சி தலைவி Andrea Horwath தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கலை கொண்டாடும் Ontarioவில் உள்ள தமிழ் சமூகத்திற்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக Ontario Liberal கட்சியின் தலைவர் Steven Del Duca ஒரு அறிக்கையில் கூறினார்.

துடிப்பான தமிழ் கனடிய சமூகத்துடன் இந்த மாகாணத்தை பகிர்வதில் பெருமை அடைவதாக Ontario பசுமை கட்சியின் தலைவர் Mike Schreiner தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார் .

Ontario சட்டசபையில் தமிழ் பாரம்பரிய மாத சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய மாகாண சபை உறுப்பினர் Todd Smith தனது வாழ்த்துக்களை தமிழர் சமூகத்திற்கு தெரிவித்துள்ளார்

தவிரவும் தமிழர்களான மாகாண சபை உறுப்பினர்களான லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்

Ontario மாகாண காவல்துறையில் கடமையாற்றும் தமிழ் உறுப்பினர்கள் அவர்களின் கலாச்சார நுண்ணறிவு மூலம் எங்கள் பணியிடங்களை வளப்படுத்தியுள்ளனர் என OPPயின் ஆணையர் Thomas Carrique தனது வாழ்த்தில் தெரிவித்தார்.

Ontarioவில் உள்ள பல கல்வி சபைகளும் தை பொங்கலை முன்னிட்டு வாழ்த்து செய்திகளை வெளியிட்டன .

Related posts

வாடகை மோசடி விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  இறப்புகளின் எண்ணிக்கையும்   அதிகரிக்கலாம் – புதிய எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment