தேசியம்
செய்திகள்

அவசர கால நிலையை அறிவித்த Winnipeg காவல்துறை

Winnipeg காவல்துறை சேவைக்கான அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Winnipegகின் காவல்துறைத் தலைவர் Danny Smyth புதன்கிழமை (05) இந்த அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு மத்தியில் அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கை காரணமாக Winnipeg காவல்துறை அவசரகால நிலையை பிரகடனப்படுத்துகிறது.
சேவையில் உள்ள 90 பேர் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 170 பணியாளர்கள் தொற்று தொடர்பான விடுப்பில் உள்ளதாகவும் காவல்துறையின் தலைமை அதிகாரி Danny Smyth கூறினார்.
இன்றைய  நிலைமை காவல்துறையின் பணியாளர் வளங்களை கணிசமாக பாதித்துள்ளது என அவர் கூறினார்.
இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சேவை மாற்றங்கள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக  Smyth கூறினார்.

Related posts

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Ontario Placeக்கு மாற்றப்படும் Science Centre?

Lankathas Pathmanathan

Leave a Comment