தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையின்றி இடைநிறுத்திய Ontario

COVID நிலைமை மோசமடைந்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தை Ontario மாகாணம் காலவரையின்றி இடைநிறுத்துகிறது.

COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதில், Ontario தனது இடைநிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிக்கிறது.

November மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு Ontario நகர இருந்தது.

ஆனாலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால் November மாதம் 10ஆம் திகதி இந்தத் திட்டம் குறைந்தது 28 நாட்கள் தாமதமானது.

இந்த நிலையில் பொது சுகாதாரத்தின் போக்குகளைக் கண்காணிக்கவும், Omicron திரிபு குறித்து மேலும் அறியவும் இந்த இடை நிறுத்தம் தொடரும் என இன்று அரசாங்கம் அறிவித்தது.

இந்த கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என மறுமதிப்பீடு செய்யப்படும் திகதி எதுவும்  தெரிவிக்கப்படவில்லை.

Related posts

பாதசாரிகளை வாகனத்தால் மோதியது பயங்கரவாத செயல் அல்ல

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

இலங்கை அதிகாரிகள் மீது கனடா விதித்த தடைகளை பலரும் வரவேற்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment